விண்வெளி பயணம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். உலகில் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்தவர் யார் என்று கேட்டால் எல்லாரும் யூரி ககாரின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரே முதலில் விண் வெளியை சுற்றி வந்தவர் என்று கூறுவார்கள். பள்ளி பாட புத்தகத்திலேயே அவரை குறித்து படித்திருக்கிறோம். முஸ்லிம்களை கேட்டால் கூட முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் தான் என்று கூறுவார்கள்.
ஆனால்...
என்ன விந்தை என்றால், யூரி ககாரின் விண்வெளிக்கு சென்று வரும் முன்பே, அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். அதிலும் மிக பெரிய விந்தை, அவர் அங்கே சென்றது கடவுளை சந்திக்க. கடவுளை விண்வெளியில் சந்தித்து, கடவுளிடம் இருந்து பல கட்டளைகளையும் வாங்கி வந்திருக்கிறார். அவர் யார்? இஸ்லாமிய மத நிறுவனரான முகமது தான் அவர்.
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.
நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
www.senkodi.wordpress.com\
