அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: முஸ்¬லிம் (4661)
முகம்மதுவின்
பொன் மொழியான ஹதீஸ்களில் ஒன்றில் மறுமை நாளில், இறுதி தீர்ப்பு நேரத்தில்
சுவனத்தில் என்ன நடக்கும், அல்லா என்ன கேள்வி கேட்பான் என்பதை குறித்து
தனது தொண்டர்களுக்கு இறைத்தூதர் எனப்படுகின்ற முகமது அவர்கள் விளக்கி
கூறுகிறார். பைபிளின் வசனம் ஒன்றையும் அடுத்து பார்க்கலாம்.
பைபிள் -மத்தேயு
31 “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். 32 எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார். 33 செம்மறியாடுகளைத் தம் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தம் இடது பக்கத்தில் நிறுத்துவார்.
34 “பின்பு, ராஜா தம் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் * உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 35 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்; 36 உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்றார். 37 அதற்கு நீதிமான்களாகிய அவர்கள், ‘எஜமானே, நீங்கள் எப்போது பசியாக இருப்பதைப் பார்த்துச் சாப்பிடக் கொடுத்தோம், தாகமாக இருப்பதைப் பார்த்துக் குடிக்கக் கொடுத்தோம்? 38 எப்போது உங்களை அந்நியராக இருப்பதைப் பார்த்து வரவேற்று உபசரித்தோம், உடையில்லாமல் இருப்பதைப் பார்த்து உடை கொடுத்தோம்? 39 எப்போது உங்களை நோயாளியாகப் பார்த்தோம் அல்லது சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். 40 அதற்கு ராஜா, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதில் அளிப்பார்.
41 “பின்பு, அவர் தம்முடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள். 42 ஏனென்றால், நான் பசியாக இருந்தேன், சாப்பிட நீங்கள் எதுவும் எனக்குக் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. 43 அந்நியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைவாசியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார். 44 அப்போது அவர்கள், ‘எஜமானே, நீங்கள் பசியாகவோ தாகமாகவோ அந்நியராகவோ உடையில்லாதவராகவோ நோயாளியாகவோ சிறைவாசியாகவோ இருப்பதைப் பார்த்து நாங்கள் எப்போது உங்களுக்குப் பணிவிடை செய்யாமல் இருந்தோம்?’ என்பார்கள். 45 அதற்கு அவர், ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியோரான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’ என்று பதில் அளிப்பார். 46 இவர்கள் நிரந்தர அழிவைப் பெறுவார்கள், நீதிமான்களோ நிரந்தர * வாழ்வைப் பெறுவார்கள்.”
இவை பைபிளின் மத்தேயு புத்தகத்தில் உள்ள வசனங்கள்.
வார
இதழ்களில், ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள் என்று ஒரு போட்டி
வைப்பார்கள். இந்த ஹதீஸ் வசனம் மற்றும் பைபிள் வசனத்திற்கும் கூட ஆறு
வித்தியாசம் போட்டி வைக்கலாம். முந்தைய வேதத்தின் பாதிப்பு இருக்கும் என்று
சொல்வதற்கு இது குரான் வசனம் அல்ல. குரான் மட்டுமே அல்லாவின்
வார்த்தைகள். ஹதீஸ்கள் முகமதுவின் வார்த்தைகள். பைபிளில் இடம் பெற்றுள்ள
ஒரு விசயத்தை முகமது சொல்கிறார் என்றால், கண்டிப்பாக அவர் பைபிளை
படித்திருக்க வேண்டும் அல்லது வேறு யாரிடமாவது கேட்டிருக்க வேண்டும்.
சொல்லப்போனால்
முகமதுவின் முதல் மனைவி ஹதீஜா ஒரு கிறிஸ்தவர், மேலும் முஹமது வளர்ப்பு
தந்தை ஒருவரால் வளர்க்கப்பட்டிருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். மேலும்
முகமதுவின் ஊரில் பல யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே முகமது கண்டிப்பாக பைபிளை குறித்து அறிந்திருப்பார்.
தேவைப்படும்போது மக்களிடம் கடவுள் சொல்லியதாக அடித்து விடுவார். முகமதுவை குறித்து சொல்லப்பட்டிருக்கும் பல கட்டு கதைகளில் அவர் கல்வி அறிவு இல்லாதவர், ஒன்றும்
தெரியாதவர் என்பதும் ஓன்று. அப்படி சொன்னால் தான் மதத்தை காப்பாற்றி
காலத்தை ஓட்ட முடியும்.

No comments:
Post a Comment